தற்போதைய செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் : 6 மாதத்தில் 13,244 வழக்குகள் பதிவு

22nd Sep 2020 03:33 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த 6 மாதத்தில் குழந்தைகளுக்கு எதிரான 13,244 பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து மாநிலங்கவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில்,

தேசிய குற்றவியல் காப்பகம் சார்பில் கடந்த மார்ச் 1, 2020 முதல் செப்டம்பர் 18, 2020 வரையில் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக 13,244 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தகவல்படி, 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 31 வரை 420 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாக என்.சி.பி.சி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும், சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை (சிஐஎஃப்) தெரிவித்துள்ளபடி, 2020 மார்ச் 1 முதல் 2020 செப்டம்பர் 15 வரை குழந்தைகள் சமந்தமான பாலியல் வழக்குகள் தொடர்பாக 3941 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Tags : child abuse
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT