தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் கடற்படையால் 49 இந்திய மீனவர்கள் கைது

21st Sep 2020 06:41 PM

ADVERTISEMENT

பாகிஸ்தான் கடற்படையால் எல்லை தாண்டிச் சென்ற 49 குஜராத் மீனவர்கள் செப்டம்பர் 15 அன்று கைது செய்யப்பட்டதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.

இதுகுறித்து குஜராத் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், குஜராத்தின் போர்பந்தரைச் பகுதியில் இருந்து 6 படகுகளிலும் கிர் சோம்நாத் பகுதியிலிருந்து 2 படகுகளிலும் கடலுக்குச் சென்ற 49 மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதால் செப்டம்பர் 15-ம் தேதி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மாநில அமைச்சர் ரூபானி கூறுகையில், மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டினால் அவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுகின்றனர். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது என தெரிவித்தார்.

மேலும், மீனவர்களுக்கு தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்த மாநில அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்குகிறது. குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் மீன்பிடி படகுகளில் 5 ஆயிரம் படகுகளில் ஜி.பி.எஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது என ரூபானி கூறினார்.

ADVERTISEMENT

Tags : Gujarat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT