தற்போதைய செய்திகள்

தில்லியில் கரோனா பாதித்த 400 குழந்தைகள் வீடு திரும்பினர்

21st Sep 2020 07:57 PM

ADVERTISEMENT

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பியதாக திங்கள்கிழமை தெரிவித்தனர்.

தலைநகர் தில்லியின் மிகப்பெரிய கரோனா சிறப்பு மருத்துவமனையாக இருப்பது லோக் நாயக் பிரகாஷ் நாராயன் மருத்துவமனை உள்ளது. இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு உள்ளது.

இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 50 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர் உர்மிளா ஜாம்ப் தெரிவித்தார்.

மேலும், இங்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் காசநோய், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளாக உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார்கள்.

ADVERTISEMENT

இங்கு குழந்தையின் தாய், குழந்தையுடன் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு கரோனா பிரிவை இந்திய தலைநகரில் முதல்முறையாக உருவாக்கியுள்ளோம்.

குழந்தைகள் பிரிவில் தொலைக்காட்சிகளில் கார்டூன் காண்பிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கதைகளை விவரிக்கும் ஒருங்கிணைப்பாளர் எங்களிடம் உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எழுத்துக்கள், விலங்குகள் மற்றும் பழங்களின் படங்களை சுவற்றில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது என கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT