தற்போதைய செய்திகள்

துபை சஃபாரி பூங்கா அக்டோபர் 5ம் தேதி திறப்பு

21st Sep 2020 09:33 PM

ADVERTISEMENT

துபையில் உள்ள சஃபாரி பூங்காவில் பார்வையாளர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என துபை நகராட்சி அறிவித்துள்ளது.

துபையில் பாராமரிப்பு காரணமாக மூடப்பட்ட சஃபாரி பூங்கா பணிகள் முடிவடைந்ததால் வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

உலகளாவிய முன்னனி சுற்றுலாத் தளங்களில் ஒன்றான சஃபாரி பூங்கா விரிவான புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்தப் பூங்காவானது, 119 ஹெக்டேரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள், விலங்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என கல்வி, பொழுது போக்கு என பல தரப்பினர்களுக்கு உபயோகமானதாக உள்ளது.

இங்கு முக்கியமாக சஃபாரி பயணமானது பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான விலங்குகளை அவர்களால் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் விரும்பி வருகின்றனர் என துபாய் நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி கூறினார்.

ADVERTISEMENT

Tags : Dubai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT