தற்போதைய செய்திகள்

கேரளத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 12,250 படிப்பு அறைகள்

DIN

கேரளம் முழுவதும் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 12,250 மாணவர்களின் வீடுகளில் படிப்பு அறைகள் கட்டும் திட்டத்தின் முதல் கட்டத்தை கேரள முதல்வர் சனிக்கிழமை அறிமுகம் செய்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர், கேரளத்தில் உள்ள பட்டியல் இனம் மற்றும் பழங்குடியைச் சேர்ந்த மாணவர்களின் வீடுகளில் அவர்கள் படிக்க போதுமான வசதிகள் இல்லை. இந்த பிரச்சினையை தீர்க்க,  பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் வீடுகளில் ஒரு படிப்பு அறை அமைக்க அரசு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்குகிறோம்.

அந்த அறைகள் கட்டி முடித்தவுடன் கணினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும். தற்போது மாநிலம் முழுவதும் 12,250 படிப்பு அறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8,500 அறைகள் 2021க்குள் கட்டப்படும் என கூறினார்.

இதே திட்டத்தின் கீழ், பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு பொதுப் படிப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன, மேலும் 250 பொதுப் படிப்பு அறைகள் ஏற்கனவே சமூக அரங்குகள் போன்ற பொது வசதிகளைப் பயன்படுத்தி முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வரை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில், மொத்தம் 500 பொதுப் படிப்பு அறைகள் கட்டுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.   

மேலும் 5 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடி சமூக குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.2 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

12 முடிந்த மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பட்டியல் சாதி மேம்பாட்டுத் துறையின் கீழ் 44 தொழிற்பயிற்சி கூடத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் உயர்நிலை பட்டப் படிப்புகளைப் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடி சமூக மாணவர்களுக்கு ரூ. 25 லட்சம் வரை நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் கீழ் சிவில் சர்வீஸ் அகாடமியில் 300 பேருக்கு இலவச பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT