தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் அருகே இளைஞரை காரில் கடத்தி கொலை: காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

19th Sep 2020 02:43 PM

ADVERTISEMENT


சாத்தான்குளம் அருகே  இளைஞரை காரில் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம்  காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த  செல்வன் (30) என்ற இளைஞர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக  தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் முழு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT