தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாள் கோவில் பிரமோற்சவ உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

19th Sep 2020 03:03 PM

ADVERTISEMENT

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாள் கோவில் பிரமோற்சவ உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் என்று அழைக்கப்படும் வடபத்ரசாயி பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவில் ஸ்ரீஆண்டாள் கோவிலுடன் இணைந்து உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அதுபோல் நிகழ்வாண்டில் புரட்டாசி பிரம்மோற்சவ உற்சவம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

ADVERTISEMENT

வடபத்ரசாயி பெருமாள் கோவில் பிரமோற்சவ உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வேத கோஷங்கள் முழங்க, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியினை வாசுதேவ பட்டர் ஏற்றினார்.

இன்றிலிருந்து 10 நாள் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. தினமும் காலை ஸ்ரீபெரிய பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக  திருவீதி உலா நடைபெறாது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT