தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வார வழிபாடு

19th Sep 2020 02:55 PM

ADVERTISEMENT


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர். 

இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமளுக்கு காலை 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று.அதை தொடர்ந்து அதிகாலை 5.30 காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது. 

அதிகாலை 3 மணியில் கோவில் நடை திறக்கப்பட்டு உடன் கோவிந்தா கோபாலா என கோஷங்கள் எழுப்பியபடியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT

பெருமாளை தரிசிக்க வந்த ஆயிரக்கனக்கான பக்தர்களை காணலாம்.

கரோனா வைரஸ் காரணமாக ஶ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணிந்து வருவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 10 வயதிற்கு கீழ் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்கு ஆட்டோக்களில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.  

பக்தர்கள் வருகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 30 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராத விபத்துக்களை  தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது. சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது

திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதியில் அவர்களுக்கு தேவையான வசதிகளை அந்த கோவில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT