கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி முதல் வார சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி முதல் வாரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகள் நடத்தினர்.
ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவரை வீதி உலாவிற்காக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை சிறுவர்கள் இழுத்துச் செல்ல பஜனை பாடியபடியே ஆடிப்பாடி சென்றனர். கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
கூடலூரில் உள்ள கூடல் அழகிய பெருமாள், தம்மனம்பட்டி மலையடிவாரத்திலுள்ள பெருமாள் மலை கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு வழிபாடுகள் நடத்தினர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.