தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 381 கோடியில் விரிவாக்கப் பணி

18th Sep 2020 09:44 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் நடந்து வருவதாக இந்திய விமான நிலைய ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்ட சுட்டுரையில்,

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் நடந்து வருகின்றது. இந்த திட்டமானது ரூ. 381 கோடி செலவில் நடந்து வருகின்றது. இதில், ஓடுபாதை அகலப்படுத்தல் மற்றும் புதிய முனைய கட்டடம் அடங்கும். 

புதியக் கட்டடமானது 13,530 சதுர மீட்டர் பரப்பளவில் சுற்றுச்சூழல் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இத்திட்டத்தில், ஏ-321 ரக 5 விமானங்களை நிறுத்துவதற்கான இடம், புதிய ஏடிசி கோபுரம், தீயணைப்பு நிலையம் ஆகியவை ஒரு பகுதியாகும் என்று கூறினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT