தற்போதைய செய்திகள்

பிரதமர் கிஷான் திட்டத்தில் 11 கோடி பேர் பதிவு : மத்திய அமைச்சகம்

18th Sep 2020 04:13 PM

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் செப்டம்பர் 17 வரை 11 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாய அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

பிரதமரின் கிஷான் உதவித் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு பயனடைவோரின் எண்ணிக்கை செப்டம்பர் 17 வரை  11,07,62,287 பேர் என அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2,59,52,664 பேர், மகாராஷ்டிரத்தில் 1,10,14,738 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் 48,63,193 பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : kishan scheme
ADVERTISEMENT
ADVERTISEMENT