தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 2 மணிநேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்பு

18th Sep 2020 08:13 PM

ADVERTISEMENT

கேரளத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 2 மணிநேரம் தான் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டுமென மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்பிற்கான நேரத்தை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர இந்த அறிவிப்பை பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பில் முக்கியமான மூன்று வழிகாட்டுதல்களாக, தொடர்ச்சியான வகுப்புகள் இருக்கக்கூடாது, ஒவ்வொரு அமர்விற்கு இடையிலும் 15 நிமிடங்கள் இடைவெளி, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என கூறப்பட்டிருக்கிறது.


இதற்கு முன், திருவல்லாவில் உள்ள செயின்ட் மேரி குடியிருப்புப் பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு பள்ளி மாணவர்களின் பெற்றோர் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாக ஆணையத்திற்கு அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

அனைத்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஜவஹர் நவோதயா மற்றும் கேந்திரியா வித்யாலயா நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், தங்களது பள்ளி வகுப்புகளின் மாதாந்திர நேர அட்டவணையை அந்தந்த மாவட்டக்  கல்வி துணை இயக்குநர்களிடம் வழங்க ஆணையம் அறிவுறுத்தியது.

Tags : online class
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT