ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பருவகால கூட்டத் தொடக்க நாளான இன்று ரூ. 2,584.82 கோடி மதிப்பிலான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஜார்கண்ட் சட்டமன்ற கூட்டத்தின் முதல் நாளான இன்று மாநில நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரான் ரூ. 2,584.82 கோடி மதிப்பிலான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் அதிகபட்சமாக பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ. 912.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 548.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
மேலும், நகர்புற மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 363 கோடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 312.26 கோடி மற்றும் ஊரக வளர்ச்சி (பஞ்சாயத்து ராஜ் பிரிவு) ரூ. 211 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.