தற்போதைய செய்திகள்

இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்

18th Sep 2020 06:40 PM

ADVERTISEMENT

ஆப்பிள் நிறுவனம் தனது இணைய விற்பனையகத்தை இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்தியாவில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனையகத்தை தொடங்கவுள்ளது. 

பொருள்களை விநியோகம் செய்ய புளு டார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கரோனா தொற்றின் காரணமாக பொருள்களை பாதுகாப்பாக விநியோகம் செய்ய இணையத்தில் வாங்கியதிலிருந்து 24 முதல் 72 மணிநேரமாகும் என தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் வரிசை 6 மற்றும் புதிய ஐபாட் ஏர் ஆகியவையும் இணைய விற்பனையகத்தில் இருக்கும் என கூறினர்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆப்பிள் நிறுவன துணைத்தலைவர் பிரையன் கூறுகையில், இந்தியாவில் இணைய விற்பனையகத்தை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தயாரிப்புகளை நேசிக்கும் இந்தியர்களை ஆதரிப்பதில் எங்களுக்கும் ஆர்வம் உள்ளது.   

ஆப்பிள் நிறுவனம் தடையற்ற பாதுகாப்பான சேவையை வழங்க உறுதியளிக்கிறது. கரோனா காரணமாக தொடர்பு இல்லாத விநியோகம் மூலம் எங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவுள்ளோம் என கூறினார்.

உலகளவில் 38வது இணைய விற்பனையகமாக இந்திய விற்பனையகம் இருக்கும். ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் உள்ள சந்தேககங்களை தெரிந்து கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி இணையத்தளம் மற்றும் தொலைபேசி எண் மூலம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம். 

ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ள 30 நிமிடங்கள் நிறுவன ஊழியர்களின் இணைய பயிற்சியில் ஈடுபட்டுக் கொள்ளலாம்.

ஆப்பிள் இணைய விற்பனையகம் எளிதில் உபயோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடன் உதவி தேவைப்படுபவர்களுக்கான திட்டமும் உள்ளது.

மேக் அல்லது ஐ-பாட் வாங்கும் மாணவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள்,  பாகங்களுக்கான தல்ளுபடிகள் மற்றும் ஆப்பிள் கேர்+ மூலம் 2 ஆண்டுகள் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் தற்செயலான சேதத்தை சரி செய்து தரப்படும்.

நாங்கள் எங்களது இந்திய வாடிக்கையாளர்களை விரும்புகிறோம், அவர்களுக்கு சேவை செய்ய காத்துக் கொண்டுள்ளோம். நேரடி விற்பனைக்கு இணையான எங்களது சேவையை அளிப்போம் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிற்கான பிரத்யேக மாதிரியை தயாரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் நேரடி விற்பனையகத்தை தொடங்க சில இடங்களை தேர்வு செய்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட நேரடி விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகின்றது. இதில், சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட் என்ற இடத்தில் மிதக்கும் விற்பனையகத்தை நிறுவியுள்ளது.

கரோனா தொற்றின் காரணமாக இணையத்தில் வாங்கிய பொருள்களை விநியோகம் செய்யும் போது கையொப்பம் தேவையில்லை எனவும் வாய்மொழி உத்தரவாதம் போதும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது, மேலும் ஆப்பிள் நிறுவனம் செய்யவிருக்கும் புதிய முதலீடுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் வேலைகள் உருவாகவுள்ளது என தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT