தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

17th Sep 2020 03:56 PM

ADVERTISEMENT

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை ஜி.எஸ்.டி. தொகையை மாநிலங்களுக்கு வழங்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய அரசு,  “மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க தற்போது போதுமான நிதியில்லை” எனத் தெரிவித்தது.

இதையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT