தற்போதைய செய்திகள்

2021 தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி : ஹர்ஷ வர்தன்

17th Sep 2020 03:27 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மாநிலங்கவையில் பேசிய ஹர்ஷ வர்தன் கூறுகையில், 

உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் கரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மேம்பட்ட திட்டமிடலுடன் அவர்கள் அந்த நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கரோனா தடுப்பூச்சி கிடைக்கும் என்று நம்புகிறோம் என கூறினார்.

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Harsha Vardhan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT