தற்போதைய செய்திகள்

நடிகர் ராமராஜனுக்கு கரோனா

17th Sep 2020 07:49 PM

ADVERTISEMENT

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பல அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‘கரகாட்டக்காரன்’ , ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’ போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்த நடிகர் ராமராஜன் கரோனா தொற்று பரிசோதனை செய்ததில் இன்று தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : actor ramarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT