தற்போதைய செய்திகள்

இந்திய முப்படைகளில் இதுவரை 19,839 பேருக்கு கரோனா

16th Sep 2020 06:32 PM

ADVERTISEMENT

இந்திய முப்படைகளில் இதுவரை 19,839 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் கூறுகையில், 

இந்திய முப்படையான ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளை சேர்ந்த 19,839 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில், ராணுவப் படையைச் சேர்ந்த 16,758 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 32 பேர் பலியாகியுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த 1,365 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 3 பேர் பலியாகியுள்ளனர். விமானப் படையைச் சேர்ந்த 1,716 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT