தற்போதைய செய்திகள்

உள்நாட்டு விமானங்களில் ஆகஸ்டில் 28.32 லட்சம் பேர் பயணம்

16th Sep 2020 05:03 PM

ADVERTISEMENT

இந்திய உள்நாட்டு விமானங்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 28.32 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக விமானத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 28.32 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட 76 சதவீதம் குறைவு என கூறினர்.

இதில், இண்டிகோ விமானத்தில் 16.82 லட்சம் பேர், ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 3.91 லட்சம் பேர், ஏர் இந்தியா விமானத்தில் 2.78 லட்சம் பேர், ஏர் ஆசிய விமானத்தில் 1.92 லட்சம் பேர், விஸ்டரா விமானத்தில் 1.42 லட்சம் பேர் மற்றும் கோ ஏர் விமானத்தில் 1.33 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு கரோனாவிற்கு பின், மே 25 முதல் 31 வரை 2.81 பேர், ஜூன் மாதத்தில் 19.84 லட்சம் பேர், ஜூலை மாதத்தில் 21.07 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்தனர். 

கரோனா தொற்றுநோயால் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவையானது மே 25 அன்று மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT