தற்போதைய செய்திகள்

தென்னிந்தியாவில் 122 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது : மத்திய அமைச்சர் தகவல்

16th Sep 2020 06:14 PM

ADVERTISEMENT

தென்னிந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 122 பேர் 17 வழக்குகளில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில்,

தென்னிந்தியாவான  தெலங்கான, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் கடந்த காலங்களில் 17 வழக்குகளில் 122 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : ISIS
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT