தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பணியில் இருந்த வீரர்கள் 4,132 பேர் பலி

15th Sep 2020 06:38 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பணியில் இருக்கும் போது 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

இதில், அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 1,597 பேர், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 725 பேர், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 671 பேர், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 429 பேர், அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த 329 பேர் மற்றும் சாஸ்திர சீமா பால் படைடைச் சேர்ந்த 381 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.

Tags : border
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT