தற்போதைய செய்திகள்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு ரத்து : எம்.பி. சு.வெங்கடேசன் எதிர்ப்பு

15th Sep 2020 04:40 PM

ADVERTISEMENT

நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசிற்கு எதிராக மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் பேசுகையில்,

மருத்துவ உயர்கல்வி நீட் தேர்வில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்ற அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் பயன்பெறும் 3700 பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், அதிக பாதிப்புகளை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது, ஏனெனில் தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதன் மூலம் மத்திய அரசிற்கு அதிக இடங்களைக் கொடுக்கும் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், மத்திய அரசிற்கு தரும் பட்சத்தில் 23 சதவீத இடத்தை இழக்கிறோம். 

ADVERTISEMENT

தற்போது மாநிலத்திற்கு உள்ள 27 சதவீதமும் இல்லை என்று சொன்னால் 50 சதவீத இடத்தையும் இழக்க நேரிடும். இது மிகவும் ஆபத்தான நிலை, சமமற்றவர்களை சமமாக நடத்தகூடாது என்பது தான் இட ஒதுக்கீட்டின் முக்கிய அம்சம். அதனால் தான் சமூகரீதியாக, கல்வி ரீதியாக  இட ஒதிக்கிடு வழங்க வேண்டும் என அரசியல் சாசன சட்டம் சொல்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம், அரசியல் சாசன சட்டம் தரும் உரிமையை மத்திய அரசு பறிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீட்டையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது எனவே மத்திய அரசு நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்தை நிறுத்த வேண்டும் என பேசினார்.  

Tags : NEET Su.Venkatesan MP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT