தற்போதைய செய்திகள்

கடன் பிரச்னையால் சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதி : ரூ. 17 லட்சம் இழந்து சோகம்

15th Sep 2020 05:24 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் கடன் பிரச்னையால் ரூ. 2 கோடிக்கு சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதிகள்  சேவைக் கட்டணமாக ரூ. 17 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காமேஸ்வர் மற்றும் பார்கவி என்ற தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் சொந்தமாக மருந்துக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருந்துக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்ததால், அந்தக் கடனை திரும்ப செலுத்த சிறுநீரகத்தை விற்க முயன்றனர்.

இந்நிலையில் சிறுநீரகம் விற்க புதுதில்லியில் உள்ள சக்ரா மருத்துவமனை ஒன்றைக் கண்டார்கள். இதில், சோப்ரா சிங் என்ற இடைத்தரகருடன் இணையத்தில் பேரத்தில் ஈடுபட்டனர். இதில், இறுதியாக ஒரு சிறுநீரகத்திற்கு ரூ. 2 கோடி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மேலும், ரூ. 2 கோடி பணத்தை அறுவை சிகிச்சைக்கு பின் வாங்கி தருவதாகவும், தற்போது நீங்கள் ரூ. 17 லட்சம் சேவைக் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து, தம்பதியினர் மேலும் கடன் வாங்கி கொடுத்துள்ளார்கள்.

ADVERTISEMENT

மேலும், இந்த ஒப்பந்தத்தை முடிக்க மேலும் ரூ. 5 லட்சம் கேட்டதை அடுத்து காமேஸ்வரன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT