தற்போதைய செய்திகள்

கரோனாவால் பாதுகாப்புப் படை வீரர்கள் 100 பேர் பலி

15th Sep 2020 08:12 PM

ADVERTISEMENT

மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் செப்டம்பர் 10 வரை கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக செவ்வாய்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், கரோனா தொற்றால் செப்டம்பர் 10 வரை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 35 பேர், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 23 பேர், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 24 பேர், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 7 பேர், சாஸ்திர சீமா பால் படைடைச் சேர்ந்த 6 பேர் மற்றும் அசாம் ரைப்பில்ஸ் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT