தற்போதைய செய்திகள்

ம.பி.: மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

14th Sep 2020 04:11 PM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் மகேஷ் சந்திர ஜெயின் கூறுகையில், 

மத்திய பிரதேசத்தின் தெற்கு தோடா பகுதியில் உள்ள கடையில் சனிக்கிழமை நடந்த சோதனையில் ஆடு இறைச்சி விற்பதாக அனுமதி பெற்று மாட்டிறைச்சி விற்றது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த மாட்டிறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.  

முன்னதாக, இந்தூர் மற்றும் உஜ்ஜைனில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது மாடு படுகொலை தடுப்பு சட்டம் -2004 இன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.

ADVERTISEMENT

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 12 மாதங்கள் வரை எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT