தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் டிக்டாக்கில் ஆயுதம் காட்டிய 4 பேர் கைது

14th Sep 2020 03:44 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் டிக்டாக் காணொளி ஒன்றில் ஆயுதம் மற்றும் வெடி பொருள் உபயோகித்து காணொளி பகிர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், தொடர்ந்து டிக்டாக் செயலி மூலம் ஆயுதம் மற்றும் வெடி பொருள்கள் வைத்து 4 பேர் காணொளி வெளியிட்டனர். அவர்களை திப்பா சுல்தான்பூர் பகுதியில் சனிக்கிழமை நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் ஆயுத சட்டங்களின்படி, ஆயுதங்களை பொது வெளியில் காண்பிப்பது குற்றமாகும், மேலும் இந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

முன்னதாக ஜூன் மாதத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் காணொளிகளை பதிவுசெய்து டிக்டாக்கில் பதிவிட்ட ஒருவரை இஸ்லாமாபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

Tags : tiktok
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT