தற்போதைய செய்திகள்

செளதியில் அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை கட்டாயம்

11th Sep 2020 09:35 PM

ADVERTISEMENT

செளதியில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களும் சீருடை அணிய வேண்டும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அகமது பின் சுலைமான் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு துறையிலும், ஊழியர்களின் இணக்கத்தை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்-பெண் என அவர்களது பணிக்கு ஏற்றவாறு சீருடை இருக்கவேண்டும் என கூறினார்.

இந்த அமைச்சரவை ஆணை செளதி தொழிலாளர் சட்டத்தின் 38 வது பிரிவின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பின்பற்றப்படும்.

மேலும், சீருடை அணியாத ஊழியர்களுக்கு நிர்வாகத்தினர் ஆபராதம் விதிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : saudi arabia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT