தற்போதைய செய்திகள்

ம.பி.யில் வெள்ளத்தால் ரூ. 9500 கோடி இழப்பு : சிவராஜ் செளகான்

11th Sep 2020 08:13 PM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ. 9500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய குழுவை சந்தித்த பிறகு முதல்வர் சிவராஜ் செளகான் தெரிவித்தார்.

முதல்வர் சிவராஜ் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் வரை ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள், விவசாய நிலங்கள், பயிர்கள், கால்நடைகள் மற்றும் பயிர்கள் என ரூ.9,500 கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், 11.30 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் அழிந்ததில் 11.34 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் 8,442 கிரமங்கள் மழையால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதில், செஹோர், ரைசன், ஹோஷங்காபாத், ஹர்தா, தேவாஸ் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது.

பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு உதவுகிறது, ஆனால் பூச்சியால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்ய மத்திய அரசு உதவி தேவைப்படுகிறது.

மேலும், பூச்சிகள் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, அதை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு ஒரு தனிக் குழுவை அனுப்ப வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, இழப்புகளை சந்தித்தவர்களிடம் நேரில் பேசிய பின்னர் சேத மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்க வேண்டும் என மத்திய குழுவை அவர் கேட்டுக்கொண்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT