தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் 5 ஆவது அமைச்சருக்கு கரோனா உறுதி

11th Sep 2020 03:23 PM

ADVERTISEMENT

ஒடிசாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் துகுனி சாஹுவுக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சாஹு சுட்டரில் கூறுகையில், கரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக என்னுடம் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கூறினார்.

அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் 5 ஆவது அமைச்சர் சாஹு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சுசாந்த் சிங், உயர்கல்வித்துறை அமைச்சர் அருண்குமார் சாஹூ, ஜவுளித்துறை அமைச்சர் பத்மினி தியான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜே.பி.பனிகிராஹி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதுதவிர, ஒடிசா மாநிலத்தில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT