தற்போதைய செய்திகள்

கேரளத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

11th Sep 2020 07:39 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இன்று புதிதாக 2,988 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 2,988 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,02,254 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 14 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 1,326 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 73,904 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 27,877 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT