தற்போதைய செய்திகள்

ஆப்கனில் 22 தலிபான்கள் சுட்டுக் கொலை

11th Sep 2020 06:05 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வியாழக்கிழமை 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் படை வெளியிட்ட அறிக்கையில்,

கலந்தர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் சோதனைச் சாவடிகளை வியாழக்கிழமை இரவு தலிபான்கள் தாக்கினார்கள். இதையடுத்து ஆப்கன் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோல், சபரி மாவட்டத்தில் ஒரு தலிபான் மறைவிடத்தை குறிவைத்து போர் விமானம் தாக்கியதில் 12 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ADVERTISEMENT

மேலும், இந்த அறிக்கையில் ஆப்கான் படைகளில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்த செய்தியும் தெரிவிக்காமல், தலிபான்கள் ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றும் வரை ஆப்கான் படையின் ஒடுக்குமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Afghanistan
ADVERTISEMENT
ADVERTISEMENT