தற்போதைய செய்திகள்

தாத்தாவின் ரூ.2.34 லட்சம் ஓய்வூதியப் பணத்தை பப்ஜியில் செலவிட்ட பேரன்

10th Sep 2020 05:43 PM

ADVERTISEMENT

புதுதில்லியில் பப்ஜி விளையாடுவதற்காக 15 வயது சிறுவன் தனது தாத்தாவின் ஓய்வூதிய வங்கி கணக்கிலிருந்து ரூ. 2.34 லட்சத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்துள்ளார். 

இதுகுறித்து தில்லி சைபர் காவல்துறையினர் கூறுகையில், 

பப்ஜி விளையாட்டில் உள்ள துப்பாக்கி, உடை போன்ற விசயங்களுக்காக 15 வயது சிறுவன் ஒருவர் தனது தாத்தாவின் ஓய்வூதிய கணக்கிலிருந்து பணத்தை எடுத்து செலவழித்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை ரூ. 2,500 கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், கணக்கில் இருப்புத்தொகை ரூ.250 உள்ளதாகவும் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததைக் கண்ட முதியவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

புகாரையடுத்து விசாரித்ததில் கடந்த 2 மாதங்களாக பங்கஜ் குமார் என்ற பேடிஎம் பண பரிவர்த்தனை செயலிக்கு முதியவரின் வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது. 

இதையடுத்து குமாரை விசாரித்ததில், பணபரிவர்த்தனையில் ஈடுபட்டது முதியவரின் 15 வயது பேரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சிறுவன் 2 மாதங்களாக பரிவர்த்தனையில் ஈடுபட்டதும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு பிறகும் குறுஞ்செய்தியை அழித்ததும் தெரியவந்தது என கூறினார்கள்.

Tags : PUBG
ADVERTISEMENT
ADVERTISEMENT