தற்போதைய செய்திகள்

கரோனா பாதித்த பச்சிளம் குழந்தையை கைவிட்ட பெற்றோர்

10th Sep 2020 07:18 PM

ADVERTISEMENT

ராஞ்சியில் கரோனா என்று தெரிந்தவுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட பிறந்து 14 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை, கரோனாவை வென்று நலமுடன் உள்ளது.

இதுகுறித்து குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அபிஷேக் ரஞ்சன் கூறுகையில்,

ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் விஸ்ரம்பூர் பகுதியைச் சார்ந்த ஒரு குடும்பத்தினர் 10 நாள்களுக்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தையை குடல் பிரச்சனைக்காக ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது, குழந்தைக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானதால் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு பெற்றோர்கள் சென்றுவிட்டனர். மேலும், அவர்கள் தொலைபேசியையும் அணைத்து வைத்துவிட்டனர்.

ADVERTISEMENT

பின், குழந்தையின் நிலை மோசமடைவதைக் கண்ட மருத்துவமனை நிர்வாகம் முன்வந்து குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. அதே, நேரத்தில் குழந்தைக்கு கரோனா சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தற்போது, குழந்தை நலமாக உள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தையை இரண்டு நாள்களில் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுருத்தினோம். அவர்கள் மறுத்த நிலையில், குழந்தையில் தாத்தா-பாட்டி மருத்துவமனையில் குழந்தையை பெற்று செல்ல வந்துள்ளனர் என கூறினார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT