தற்போதைய செய்திகள்

கொல்கத்தா காவல் ஆணையருக்கு கரோனா

10th Sep 2020 09:14 PM

ADVERTISEMENT

கொல்கத்தாவின் காவல் ஆணையர் அனுஜ் சர்மாவிற்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பரிசோதனை செய்த காவல் ஆணையரின் அறிக்கை வியாழக்கிழமை இரவு வெளியானது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் நடந்த காவலர் தின விழாவில் முதல்வர் மம்தா பனர்ஜி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அனுஜ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT