தற்போதைய செய்திகள்

வங்கதேச மசூதி வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27-ஆக உயர்வு

8th Sep 2020 03:46 PM

ADVERTISEMENT

வங்கதேச மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து, தலைநகா் டாக்காவிலுள்ள தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பைதுல் சலாத் மசூதி வெடிவிபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 போ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, அந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.இதுதவிர, அந்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 போ் உயிருக்குப் போராடி வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.டாக்காவின், பைதுல் சலாத் பகுதில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டது.

சமையல் எரிவாயு குழாய் இணைப்பில் கசிவு ஏற்பட்டு, மசூதிக்குள் அந்த வாயு சூழந்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக மசூதிக்குள் இருந்த குளிரூட்டு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது.இந்த விபத்தில், தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

Tags : Bangladesh
ADVERTISEMENT
ADVERTISEMENT