தற்போதைய செய்திகள்

ராஜஸ்தான் பாஜக தலைவருக்கு கரோனா

4th Sep 2020 10:43 AM

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சதீஷ் பூனியா சுட்டுரையில் கூறுகையில்,

நேற்று எனக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. மருத்துவரின் ஆலோசனைபடி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும் கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோசதனை செய்து கொள்ளுங்கள் என கூறினார்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில சட்டபேரவை எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT