கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செப்டம்பர் 7 ஆம் தேதி கேரள முதல்வர் பிணராயி விஜயன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன் மாநிலம் தொடர்பான பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது குறித்து செப்டம்பர் 7 ஆம் தேதி ஆலோசனை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கேரள முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த முறை மாநிலத்தில் கரோனா அதிகரிப்பு, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை என பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
கேரளத்தில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஒரு ஆளும் இடதுசாரி உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 19 வலதுசாரி உறுப்பினர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.