தற்போதைய செய்திகள்

முதுகுளத்தூர்: தமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி

3rd Sep 2020 05:27 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி முதுகுளத்தூர் நகரில் மாவட்டத் தலைவர் முகம்மது இக்பால் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது முஹிதுல்லா, மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர், மாவட்ட துணை நிர்வாகிகள் சல்மான், சகாபுதீன், காதர்மைதீன், சிந்தா ஷேக், ரோஸ் காதர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஜபருல்லாகான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதல் நிகழ்வாக முதுகுளத்தூர் நகரில் 2 இடத்தில் 25 அடி உயர கொடி கம்பத்தில் தமுமுக கொடி ஏற்றப்பட்டது. இரண்டாவது நிகழ்வாக மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியை முதுகுளத்தூர் சார்பு ஆய்வாளர் சக்திவேல் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

மூன்றாவது நிகழ்வாக மாற்றுத் திறனாளி பள்ளி மற்றும் பசும் குடில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. நான்காவது நிகழ்வாக கால்பந்து போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் இஸ்மாயில், ராஜா, காதர், சகுபர் சாதிக், தமிம், ஷேக், பீர் நவாஸ்கான், சாலிஹ், ஜலால் காதரி, அகமது, ஹனிபா, சீனி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT