தற்போதைய செய்திகள்

வீராட்சிகுப்பம்: புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிக்கு பூமிப் பூஜை

1st Sep 2020 05:09 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் வீராட்சிகுப்பம் ஊராட்சியில் புதிதாக ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணிக்கு பூமிப் பூஜை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  மத்தூர் ஒன்றியம் வீராட்சிகுப்பம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் 2020-21 நிதியாண்டிற்கான புதியதாக ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணிக்கு  பூமிப் பூஜை  நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து  புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பிரபு  மற்றும் வார்டு உறுப்பினர்கள், மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தின் மத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி,  ஆனந்த், பிரபாகரன், வடிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : krishnagiri
ADVERTISEMENT
ADVERTISEMENT