தற்போதைய செய்திகள்

ரூ. 1.26 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை

29th Oct 2020 04:04 PM

ADVERTISEMENT

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 27 வரை வருமான வரி செலுத்திய 39.14 லட்சம் பேருக்கு ரூ. 1.26 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் அக்டோபர் 27 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,26,909 கோடி தொகையை 39.14 லட்சம் கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

அதில், 37,21,584 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 34,532 கோடியும் 1,92,409 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு ரூ. 92,376 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Income Tax
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT