தற்போதைய செய்திகள்

ராணா அதிரடி அரைசதம் : சென்னைக்கு 173 ரன்கள் இலக்கு

29th Oct 2020 09:15 PM

ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸு 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தனர்.

13-வது ஐபிஎல் சீசனின் 49-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரானா, கில் ஜோடி வலுவான தொடக்கம் தந்தனர்.

இந்த ஜோடி 50 ரன்களை கடந்த போது கில் 26 ரன்களுக்கு கரண் பந்தில் போல்டானார். பின் களமிறங்கிய நரைன் 7 ரன்களில் சாண்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

அடுத்து களமிறங்கிய ரின்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரானா அரைசதம் கடந்த நிலையில் 61 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய கேப்டன் மார்கன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக தினேஷ் கார்த்திக் 21 ரன்களிலும், திரிபாதி 3 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தனர்.

 

Tags : IPL 2020 csk vs kkr
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT