தற்போதைய செய்திகள்

கரோனாவால் பாதித்த பெண்ணிற்கு 3 குழந்தைகள் பிரசவிப்பு

29th Oct 2020 06:55 PM

ADVERTISEMENT

ராய்ப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 28 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்ட அப்பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

அந்த மூன்று குழந்தைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட முதல் அறிக்கையில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT