தற்போதைய செய்திகள்

திருப்பூரில் தூய்மைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

27th Oct 2020 03:17 PM

ADVERTISEMENT

திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் பி.பழனிசாமி தலைமை வகித்தார்.

இதில், பங்கேற்ற தூய்மைப்பணியாளர்கள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களும், 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களும் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி தூய்மைப்பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூ.510, ஓட்டுநர்களுக்கு ரூ.590 ஊதியமாக வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள், ஓட்டுநர்களுக்கு பிடித்தம் செய்த இபிஎஃப், இஎஸ்ஐ அட்டைகளை வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் வரும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் தொகையை வழங்க வேண்டும்.

மேலும், மாதம் 10 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்,ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

Tags : Tiruppur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT