தற்போதைய செய்திகள்

ம.பி.யில் மிதமான நிலநடுக்கம்

27th Oct 2020 11:44 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தின் சியோனியில் செவ்வாய்க்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

சியோனியில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 3 ஆக பதிவானது, மேலும் 15 கி.மீ. ஆலத்தில் மையம் கொண்டிருந்தது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கமானது, சியோனில் இருந்து 96 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாக்பூரிலும் உணரப்பட்டதாக தெரிவித்தனர்.

ADVERTISEMENT

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT