தற்போதைய செய்திகள்

கேரளத்தில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்

27th Oct 2020 04:47 PM

ADVERTISEMENT

கேரளத்தில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன்,

இந்த குறைந்தபட்ச விலை, உற்பத்தி விலையைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை சரிந்தாலும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையிலேயே கொள்முதல் செய்யப்படும்.

இதன்மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த நாட்டின் முதல் மாநிலமாக கேரளம் உள்ளது.

ADVERTISEMENT

நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விநியோகிப்பதை ஒருங்கிணைப்பார்கள்.

குறைந்தபட்ச விலையின் பயனைப் பெறுவதற்காக பயிர் காப்பீடு செய்த பின்னர் விவசாயிகள் விவசாயத் துறையின் பதிவு தளத்தில் பதிவு செய்யலாம். குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற முழு விநியோகச் சங்கிலி செயல்முறைகளையும் அமைக்க இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது" என்று விஜயன் மேலும் கூறினார்.

பல ஆண்டுகளாக கேரளா அதன் காய்கறி தேவைகளுக்காக அண்டை மாநிலங்களை மட்டுமே நம்பியுள்ளது மற்றும் சமீபத்திய காலங்களில் மாநிலத்தின் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்து 14.72 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம், இந்த ஆண்டு காய்கறிகள் மற்றும் கிழங்கு பயிர்கள் ஒவ்வொன்றும் கூடுதலாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT