தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் விமான நிலையத்தில் முதன்முறையாக ‘இ-போர்டிங்’ சேவை

27th Oct 2020 12:31 PM

ADVERTISEMENT

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு இ-போர்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக ஹைதராபாதில் இருந்து வெளியேறும் சர்வதேச விமான பயணிகள், காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு மூலம் காண்பித்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் முதன்முறையாக இ-போர்டிங் அறிமுகப்படுத்திய விமான நிலையமாக உள்ளது.

தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸின் சர்வதேச விமானங்களில் இந்த சேவை அனுமதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த சேவையின் முதல் விமானமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் அக்டோபர் 2 ஆம் தேதி 6E 1405 விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து தங்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது அறிமுகப்படுத்தியது.

ஹைதராபாத்தில் இருந்து இயங்கும் அனைத்து சர்வதேச விமானங்களிலும், இந்த சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : hyderabad airport
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT