தற்போதைய செய்திகள்

பிகாரில் நாளை (அக்.28) முதற்கட்டத் தேர்தல்

27th Oct 2020 12:04 PM

ADVERTISEMENT

பிகார் சட்டப்பேரவையின் முதற்கட்டத் தேர்தல் 71 தொகுதிகளில் நாளை நடக்கவுள்ளது.

அக்டோபர் 28 ஆம் தேதி முதற்கட்டமாக பிகாரில் நடக்கும் 71 சட்டப்பேரவை தேர்தலில் 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள்.

கரோனா பேரிடருக்கு மத்தியில் நடக்கும் தேர்தலின் பாதுகாப்பு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு வாக்குச் சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கையை 1,600இல் இருந்து 1,000 வரை குறைத்துள்ளது. 80 வயதுக்கு அதிகமானோர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தனி வாக்குப்பதிவு நேரமும், அஞ்சல் வாக்குப்பதிவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சுத்திகரிப்பு, வாக்குப்பதிவு செய்யும் நபர்களால் முகமூடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது மற்றும் வெப்பம் பரிசோதித்தல், கை சுத்திகரிப்பு, சோப்பு மற்றும் நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்க உள்ள 2.14 கோடி பேரில், 1.01 கோடி பெண்கள் மற்றும் 599 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர்.

வேட்பாளர்களில் 952 ஆண்கள் மற்றும் 114 பெண்கள் உள்ளனர், அதிகபட்சமாக கயா டவுன் தொகுதியில் 27 பேர் உள்ளனர், குறைந்தபட்சமாக பங்கா மாவட்டத்தில் கட்டோரியா தொகுதியில் 5 பேர் உள்ளனர்.

முக்கிய அரசியல் கட்சிகளில், 71 இடங்களில் 35 இடங்களில் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் ஜே.டி.யு. கட்சி போட்டியிடுகிறது, அதன் கூட்டணி கட்சியான பாஜக (29), எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. தனது வேட்பாளர்களை 42 இடங்களில் நிறுத்தியுள்ளது, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 20 சட்டசபை பிரிவுகளில் போட்டியிடுகிறது.

காமன்வெல்த் விளையாட்டு தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ஸ்ரேயாசி சிங் (வயது 27) ஜமுயி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிமுகமாகிறார்.

Tags : Bihar election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT