தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் மதரஸாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

27th Oct 2020 01:19 PM

ADVERTISEMENT

பெஷ்வர்: பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ஒரு மதரஸாவில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில்,

பெஷ்வர் நகரின் டிர் காலனியில் அமைந்துள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. இதில் 7 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 70 பேர் காயமடைந்துள்ளனர். 

பலியானவர்களில் 4 பேர் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என்று பேஷ்வரின் லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (செயல்பாடுகள்) மன்சூர் அமன் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் குண்டுவெடிப்பிற்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனமான (ஐ.இ.டி) 5 கிலோ வரை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என கூறினார்.

விபத்தில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

பிரதமர் இம்ரான் கான் குண்டுவெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் குணமடைந்து வர பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் பி.எம்.எல்-என் தலைவருமான நவாஸ் ஷெரீப்பு, குண்டுவெடிப்பைக் கண்டித்து, மதரஸாவை குறிவைத்தவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Tags : Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT