தற்போதைய செய்திகள்

திருவள்ளூரில் பல்வேறு நகை திருட்டுகளில் தொடர்புடையவர் கைது

26th Oct 2020 08:32 PM

ADVERTISEMENT

திருவள்ளூர்: சென்னையில் பல்வேறு நகைகடைகளில் திருடிய வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் திருவள்ளூர் அருகே பழைய இரும்பு கடை நடத்தி வரும் காதலி வீட்டில் பதுங்கியிருந்த போது காவல்துறையினர் சுற்றி வளைத்து திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து 7 கிலோ வெள்ளி பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம், காமராஜ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்ற மார்க்கெட் சுரேஷ் (44). இவர் சென்னையில் பல்வேறு நகைக்கடைகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தாராம். இதையொட்டி சென்னை காவல்துறையினர் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் அருகே புட்லூர் பகுதியில் பழைய இரும்பு பொருள்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் கங்கா வீட்டிற்கு வந்து செல்வதாகவும், மேலும் அந்த பெண் புதிதாக நகைகள் அணிவதும் மற்றும வெள்ளிப்பொருள்களும் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் சென்னை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை காவல்துறையினர் திருவள்ளூர் அருகே புட்லூரில் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை பிடித்து ஒப்படைக்குமாறு மாவட்ட காவல் கண்காணப்பாளர் பி.அரவிந்தனுக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 2 நாள்களாக திருவள்ளூர் டி.எஸ்.பி துரைப்பாண்டியன் தலைமையில் சென்னை நகை கொள்ளையன் சுரேஷ் என்ற மார்க்கெட் சுரேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் புட்லூர் பழைய இரும்பு கடை நடத்தி வரும் பெண் வீட்டிற்கும், ரயில் நிலையம் பகுதியிலும் தனிக்குழுவாக சென்று தேடினர். அப்போது, புட்லூர் ஏரிக்கரையில் வந்தவர் காவல்துறையை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்ததில் நகை கடைகளில் திருடியதும் தெரியவந்தது. மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் புட்லூரில் கொள்ளையர் தங்கியிருந்த வீட்டில் 7 கிலோ வெள்ளிப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கடம்பத்தூர் காவல் நிலைய காவலர்கள் மார்க்கெட் சுரேசை திங்கள்கிழமை மாலையில் சென்னை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags : Thiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT