தற்போதைய செய்திகள்

லடாக் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி

26th Oct 2020 06:50 PM

ADVERTISEMENT

லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் அதிகபட்சமாக பாஜக 15 இடங்களில் வென்றுள்ளது.

லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 13 மற்றும் 14 இல் அஞ்சலிலும், அக்டோபர் 22 அன்று 26 தொகுதிகளில் 294 வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்றது. மொத்தம் 54,257 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் வாக்கெண்ணிக்கை இன்று நடைபெற்றது. 2,538 அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மற்றும் 1,635 ஈ.டி.சி. வாக்குகளும் எண்ணப்பட்டது.

இதில், 26 தொகுதிகளில், பாஜக 15, காங்கிரஸ் 9 மற்றும் சுயச்சை வேட்பாளர்கள் 2 தொகுகளில் வெற்றி பெற்றனர்.

ADVERTISEMENT

Tags : election result
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT